ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.
ரூ.29 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம்
- ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெட்டிவலம் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், வேதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரூபிணி, மேற்கு ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ்குமார், ஊராட்சி செயலர் விஜயகுமார், ரமேஷ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.