சுய உதவி குழு பொருட்களை விற்க "மதி எக்ஸ்பிரஸ்" வாகனம்
- மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைத்து பயன்பெறலாம்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி எக்ஸ்பிரஸ்" என்று பெயரில் வாகன அங்காடியை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வாழ்வாதார மும் உறுதி செய்யப்படுகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 "மதி எக்ஸ்பிரஸ்" வாகன அங்காடிகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இதற்காக விண்ணப்பிக்கும் உறுப்பி னர்கள் மாற்றுத்திறனாளி சிறப்பு சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
பொருள்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். சிறப்பு சுய உதவிக் குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவி டப்பட்ட விதவை மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் உறுப்பினர் மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதை யும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வாராக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிட மிருந்து விண்ணப்ப ங்கள் வரும் பட்சத்தில் மாவட்ட அளவிலான குழுவின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
மேற்காணும் தகுதிக ளுக்குட் பட்ட சிறப்பு சுய உதவிக்குழு மாற்றுத்தி றனாளி உறுப்பினரி டமிருந்து வருகிற 10-ந் தேதிக்குள் விண் ணப்பத்தை மாவட்டத்திலுள்ள 7 வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் மற்றும் ராணிப்பேட்டை மகளிர் திட்ட அலுவ லகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைத்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தார்.