கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- நரசிங்கபுரம் பள்ளி வளாகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி புளியந்தாங்கல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று ஊராட்சி ஒன்றிய தொடங்கி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு நரசிங்கபுரம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி கிரிசன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டியன் வரவேற்றார்.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா ஒன்றியகுழு தலைவர் வெங்கட்ரமணன் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கு ஏற்று தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் மணிமாறன், லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி விமலா, ஒன்றிக்குழு உறுப்பினர் பாப்பாத்தி ஜான் ஜெயபால், வட்டார மேற்பார்வையாளர் அண்ணாமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள். அனிதா, தேவி, அகிலாண்டேஸ்வரி, விஜயன், மணிகண்டன், ரம்யா, சுமதி, புவனேஸ்வரி, செல்வி, ஹேமலதா, செந்தாமரை, சித்ரா, சிவா, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.