அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிளான சிலம்ப போட்டி நடந்த போது எடுத்த படம்.
- அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் நடந்தது
- 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட பாரம்பரிய சிலம்ப கழகம் சார்பில் மாவட்ட அளவிளான சிலம்ப போட்டி நேற்று அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரம்பரிய சிலம்ப கழக மாவட்ட தலைவர் அசோக் குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதில் பாரம்பரிய சிலம்பம் கழகத்தின் மாவட்ட செயலாளர் செமின்ராஜ், பொருளாளர் மனோகர், துணை செயலாளர் தமிழரசு, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.