காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது
- தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கையில் மெழுகு வர்த்தி ஏந்தியவாறு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குப்புசாமி, உத்தமன், சால்வை.மோகன், நாகேஷ், ராணி வெங்கடேசன், முருகன், மோகனசுப்பிரமணியம், பிரகாஷ், உதயகுமார், ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் கணேசன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.