உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

Published On 2023-06-15 14:52 IST   |   Update On 2023-06-15 14:52:00 IST
  • 100 பேர் வழங்கினர்
  • மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அரக்கோணம்:

உலக ரத்ததான நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைத் தளங்களில் ரத்ததானமுகாம் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான நன்கொடையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நிகழாண்டு இத்தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பா துகாப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை ஆகிய படைத்தளங்களை சேர்ந்த படைவீரர்கள் அரக்கோணம் வட்டார சுகாதாரத் துறையினரோடு இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் மேகலா தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டண்ட் அகிலேஷ்குமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

முகாமில் மத்திய தொழிற்பாது காப்புப்படையை சேர்ந்த 69 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படைத்தளத்தை சேர்ந்த 31 வீரர்கள் என 100 பேர் ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள் ராஜசேகர்,ஷோபனா,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்ய ராஜ், சுகாதார ஆய்வாளர் செந்தில், செவிலியர்கள் மகாதேவி, சுமித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News