உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஏரிகரை தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

Published On 2022-12-26 15:40 IST   |   Update On 2022-12-26 15:40:00 IST
  • உறவினர்கள் சாலை மறியல்
  • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கிருஷ்ணாவரம் கிராமம் ராமானுஜம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் தனசேகரன் (35).

இவர் சூரை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராக பணி செய்து வந்தார்.இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து பாணாவரம் ரெயில் நிலையத்திற்கு உறவினரை அழைத்து செல்ல தனது பைக்கில் சென்றார்.

அப்போது ஆயல் ஏரிக்கரை மீது வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து ஏரிகரையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தனசேகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனசேகரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் ஆயல் ஏரிக்கரையில் மண் சரிவு ஏற்பட்டதால் தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடுப்பு சுவர் இருப்பது சரிவர தெரியவில்லை.

இதனால்அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும். நேற்று இரவு நடந்த விபத்தில் வாலிபர் பலியானதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பலியானவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்:-

ஆயல் ஏரிக்கரை குறுகிய சாலையாக உள்ளது. மேலும் வலது புறம் ஏரிக்கரையை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் அருகே மண் சரிவு காரணமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர்களுக்கு தடுப்பு சுவர் இருப்பது தெரியாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பாணாவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News