ஊரக வளர்ச்சித்துறையில் ராணிப்பேட்டையை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை
- மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
- 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய ஊராட்சிமன்ற குழு அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீட்டுகிற திட்டங்கள் அனைத்தையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி மற்றும் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் ஆலோசனையின்படியும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஊரக வளர்ச்சித்துறையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளுதல், அரக்கோணம் வட்டம், தணிகைபோளுர், வாணியம்பேட்டை, நாயும் கண்டிகை, இச்சிப்புத்தூர் ராகவேந்திரா நகர் பகுதிகளில் வாழும் சலவை தொழிலாளர் 40 குடும்பத்தினர்களுக்கு தணிகைபோளுர் நரிக்குறவர் வாழும் பகுதிக்கு அருகாமையிலும் மற்றும் வாணியம்பேட்டை ஊற்றுக்குட்டை அருகாமையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
அந்த இடத்தில் 40 குடும்பங்களுக்கு அரசு வழங்கும் வீட்டுமனை ஒதுக்கி பட்டா வழங்கியும், சலவை தொழில் செய்வதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி, சலவை துறை, தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்க மாவட்ட வருவாய் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) குமார், மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.