உள்ளூர் செய்திகள்

மரத்தில் ஏறி பெண் தற்கொலை முயற்சி

Published On 2023-04-25 13:12 IST   |   Update On 2023-04-25 13:12:00 IST
  • ஆக்கிரமிப்பு அகற்றியதால் ஆத்திரம்
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

அரக்கோணம்:

அரக்கோணம் கிருஷ்ணா பேட்டை பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது.

அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது லலிதா என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டை பொக்லைன் எந்திரம் வரவழைத்து அதிகாரிகள் மூலம் அகற்றப்படுவது லலிதாவுக்கு தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென வீட்டின் அருகில் இருந்த மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த பெண் காவலர்கள் அவரை பிடித்து இழுத்து கீழே இறக்கினர். அப்போது லலிதா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாற்று இடம் வழங்கி பின்னர் ஆக்கிரமித்து அகற்றக் கோரி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலர் கவுதம் மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஐசக் ஐயா ஆகியோர் கூறினர்.

இதனால் ஆக்கிரமிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டு இரவு என்று பாராமல் தொடர்ந்து வீடுகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News