உள்ளூர் செய்திகள்

சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

Published On 2022-08-26 15:56 IST   |   Update On 2022-08-26 15:56:00 IST
  • காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
  • 2 பேர் படுகாயம்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள தனி யார் தொழிற்சாலையில் கடந்த மாதம் 14 - ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளிகள் தீக்காயம் அடைந்தனர். இவர் கள் 2 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தாரிகுப்பத்தை சேர்ந்த நேதாஜி ( வயது 50 ) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags:    

Similar News