உள்ளூர் செய்திகள்

108 கலச திருமஞ்சனம் நிறைவு, ஆஷாட நவராத்திரி தொடக்க விழா நடந்த காட்சி.

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சனம் நிறைவு

Published On 2023-06-20 13:27 IST   |   Update On 2023-06-20 13:27:00 IST
  • ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில், 108 கலச திருமஞ்சன நிறைவு விழா மற்றும் ஆஷாட நவராத்திரி தொடக்க விழா ஆகியவை நடைபெற்றது.

நிறைவு விழா முன்னிட்டு தன்வந்திரி ஹோமத்துடன், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், 500 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட 21 வகையான திரவியங்கள் கொண்டு 9 அடி உயர மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு மகா அபிஷேகம், அர்ச்சனை புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றது.

ஆஷாட நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராகி அம்மனுக்கு விஷேச ஹோமம் மற்றும் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற நகர, கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News