உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகளை அகற்றிய காட்சி.

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் அகற்றம்

Published On 2023-04-12 14:19 IST   |   Update On 2023-04-12 14:19:00 IST
  • வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம்
  • மாற்று இடம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்ததால் பரபரப்பு

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதிக்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டியி ருப்பதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் உதவிபோலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 4 குடிசை வீடுகளை அகற்றி, சுமார் 21 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியிருந்த உரிமையாளர்கள் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தாசில்தார் சண்முகசுந்தரம் கூறுகையில்:-

மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. இங்கே வீடு கட்டியிருந்த 4 பேருக்கும் மாற்று இடம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News