உள்ளூர் செய்திகள்

தற்கொலை தடுப்பு தின விழா

Published On 2022-09-15 14:33 IST   |   Update On 2022-09-15 14:33:00 IST
  • முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு தினவிழா நடந்தது.
  • இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இந்த விழிப்புணர்வு தினம் நடத்தப்பட்டது.

கீழக்கரை

இன்றைய காலச் சூழலில் மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தற்கொலை என்பது ஒரு எளிதான நிகழ்வாக இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக தற்கொலை தினம் விழிப்புணர்வு தினமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினவிழா கல்லூரியின் செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.

முன்னதாக இளையோர் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர் காளிஸ் பிரபு வரவேற்றார். ராமநாதபுரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் அமைப்பு மோகனப்பிரியா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர் நம்பு கம்லி நன்றி கூறினார்.

Tags:    

Similar News