உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் அமீனா மூலம் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது எடுத்த படம். 

வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி

Published On 2023-04-07 08:23 GMT   |   Update On 2023-04-07 08:23 GMT
  • ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.

ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News