கூடுதல் பணியாளர்கள் நியமிக்க கலெக்டரிடம் கோரிக்கை
- இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கீழக்கரை
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்க நகர் செயலாளர் தாஜுல் அமீன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் 75 ஆயிரத்திற்கும்ய மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 58 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சேவை மையத்தில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித் தல், ஆதார் கார்டு பிழை திருத்தம் செய்தல், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவை களுக்கு கூடுதல் பணியாளர் இல்லாமல் மக்கள் நீண்ட நேரம் காத்து இருக்கும் நிலை உள்ளது. ஆகவே மக்கள் தேவைகளை துரித மாக நிறைவேற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.