உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.

பிணத்துடன் சாலையில் அமர்ந்த உறவினர்கள்

Published On 2023-07-27 06:56 GMT   |   Update On 2023-07-27 06:56 GMT
  • ராமநாதபுரம் அருகே பிணத்துடன் சாலையில் அமர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
  • பேச்சுவார்த்தைக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே பத்தி ராதரவை மேற்கு தெருவை சேர்ந்தவர் பனைத் தொழி லாளி முனியசாமி (65). கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராமல் தவறி விழுந்து காயமடைந்தார். அதனால் அவருக்கு ஏற் பட்ட உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

பத்திராதரவையில் அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதியவரின் சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவின் ஒருங் கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் இரு தரப்பி னரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதனை தொடர்ந்து அரசு புறம் போக்கு இடத்தை தாசில்தார் பழனிக்குமார் ஒதுக்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

பிரச்சினைக்கு தீர்வாக சுடுகாட்டிற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் புதைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் தகன மேடை மற்றும் காம்பவுண்டு சுவர், சாலை வசதி அமைத்து தரப்படும், என்றார்.

போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு தாசில்தார் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. திருப்புல்லாணி சப்- இன்ஸ்பெக்டர் கர்த்திகை ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News