உள்ளூர் செய்திகள்

விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

Published On 2023-06-13 14:06 IST   |   Update On 2023-06-13 14:06:00 IST
  • ராமநாதபுரத்தில் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு குவிந்தது.
  • 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர்.

ராமநாதபுரம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமயநாதபுரம் மாவட்டத் தலைவரும்,ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசனுக்கு சிறந்த இயக்க வாதிக்கான விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். மேலும் அவர் பணியாற்றும் ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகேசனை பாராட்டி பொறுப்பு தலைமையாசிரியர் காஜாசெரீப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News