- அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 85-வது ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் முகமது முக்தார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, கவுன்சிலர்கள் தாஸ், பெரியசாமி, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.
தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பாடல், பட்டிமன்றம், கரகாட்டம், எண்ணும், எழுத்தும் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.