உள்ளூர் செய்திகள்

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபு குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்

Published On 2022-08-06 08:23 GMT   |   Update On 2022-08-06 08:23 GMT
  • அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கீழக்கரை

கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் நேற்று 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஆய்வு பணி மேற்கொள்ள வந்த சுகாதார துறை துணை இயக்குனர் அஜீத் பிரபு குமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. தற்போது கொரானா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதைத் தொடர்ந்து நாளை (7-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலக வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம், நாடார் பள்ளி, பி.எஸ்.எம் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனை வரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பக்கீர் முகமது, கவுன்சிலர் மீரான் அலி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News