உள்ளூர் செய்திகள்
பட்டா வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- பட்டா வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவை நிறுவனர் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதி குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்காத ஆதி திராவிட நலத்துறை தாசில்தாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்
மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்டத் தலைவர் சபா தேவேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வழிவட்ட துரை பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திரா நகர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.