போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ராமநாதபுரத்தில் காங்கிரசார் போராட்டம்
- ராமநாதபுரத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
- ஏற்பாடுகளை பொன் பெரியார் மோதிலால் நேரு செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பொறுப்புக்குழு தலைவர் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமையில் ேபாராட்டம் நடந்தது.
இதில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டை முத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், முத்துக் கிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பெமிலா விஜயகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுசாமி, வட்டாரத் தலைவர்கள் காருகுடி சேகர், கோவிந்தன், ஆதி, மேகநாதன், மாநில பேச்சாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டுனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதற்கான ஏற்பாடுகளை பொன் பெரியார் மோதிலால் நேரு செய்திருந்தார்.