கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து 325 இடங்களில் முகாம்
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து 325 இடங்களில் முகாம் நடக்கிறது.
- முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்ப டுத்துவது தொடர்பாக மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஆய்வு மேற்கொண்டு பேசிய தாவது:-
முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ெதாடர்பாக மாவட்டத்தில் முதற் கட்டமாக 325 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் இடங்களில் தேவையான மின் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் இருக்கை வசதி போன்றவற்றை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடை பெறும் பகுதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரேசன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப் படுவதை கண்காணித்தி டவும், ரேசன் கடை பணி யாளர்கள் தங்கள் கடை களுக்கு தேவையான விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங் களை தீர்த்திடவும் பகுதி வாரியாக நியமிக்கப் பட்டிருந்த பொறுப்பு அலு வலர்கள் செயல்பட வேண்டும்.
மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் ஆலோ சனைக்கூட்டம் நடத்தி அவர்களுக்கு இத்திட்டத்தில் சேரக்கூடிய பயனாளி களின் தகுதிகள் மற்றும் பிற விளக்கங்களை தெரிவிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்கள் தேவை யான தன்னார்வ லர்கள் விவரங்கள் மற்றும் மகளிர் குழு ஒருங் கிணைப்பாளர்கள் குறித்த விவரப்பட்டியலை தயார் செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் சமப் பிக்க வேண்டும். காவல் துறையின் மூலம் முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி , ராமநாத புரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.