உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா விழிப்புணர்வு

Published On 2023-02-08 07:59 GMT   |   Update On 2023-02-08 07:59 GMT
  • ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூலகத்தின் சார்பில் 5-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா பற்றி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசி யம் பற்றி எடுத்துரைத்தார். தமிழாசிரியர் சிவகாமி முன்னிலை வகித்தார்.

நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி பற்றிக் கூறினார். அனைவரும் வாருங்கள் புத்தகத் திருவிழாவிற்கு, புத்தகம் படிப்போம் புது உலகு படைப்போம், நம்ம ராம்நாடு புத்தகத் திருவிழா, புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள் ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திக்கொண்டு அனை வரும் புத்தகத் திருவிழா வில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News