உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது. 

பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு

Published On 2023-06-19 07:54 GMT   |   Update On 2023-06-19 07:54 GMT
  • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
  • இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News