உள்ளூர் செய்திகள்
ஆர். காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் கண்காட்சி நடந்தது.


தொன்மை பாதுகாப்பு மன்ற ெதாடக்க விழா-கண்காட்சி

Published On 2022-08-13 08:24 GMT   |   Update On 2022-08-13 08:24 GMT
  • ராமநாதபுரம் அருேக தொன்மை பாதுகாப்பு மன்ற ெதாடக்க விழா கண்காட்சி நடந்தது.
  • இதற்கான ஏற்பாடுகளை 9-ம் வகுப்பு மாணவர்கள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத் தொடக்க விழா மற்றும் கண்காட்சி தலைமையாசிரியர் சாய்ராம் தலைமையில் நடந்தது. உதவி தலைமையாசிரியர் அபிமன்னன் முன்னிலை வகித்தார்.

9-ம் வகுப்பு மாணவி அட்சயா வரவேற்றார். தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் சாந்தி பழமையை பாதுகாப்பதில், மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மை மூலம் அறியமுடிகிறது.

முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரிய வாழ்க்கை முறையில் இருந்து நாம் மாறி வருவதால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை பண்பாட்டை அறிந்து கொள்ள தொன்மைப் பாதுகாப்பு மன்றம் உதவுகிறது என்றார்.

பட்டதாரி ஆசிரியர் ஜோஸ்பின் செல்வி நன்றி கூறினார். இதைெயாட்டி நடந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை 9-ம் வகுப்பு மாணவர்கள் தருண், உதயமூர்த்தி, நேசிகாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News