மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்
- மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- இதனை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் எக்ககுடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1 பயனாளி களுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை 4 பயனாளி களுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலும், உட்பிரிவு பட்டா மாறுதல் 6 பயனாளி களுக்கு, முழப்புலம் பட்டா மாறுதல் 5 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா 27 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், இலவச வீட்டுமனைப்பட்டா 4 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், இலவச தையல் எந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 952 மதிப்பீட்டிலும், ஊரணி தூர்வாரும் திட்டப்பணிக்கு ரூ.22 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்று வழங்குதல் 5 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பீட்டிலும் வழங்கினார். இந்த திட்டங்கள் உள்பட மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 17 ஆயிரத்து 713 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.