உள்ளூர் செய்திகள்

கோவையில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திற்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-08-10 09:35 GMT   |   Update On 2023-08-10 09:35 GMT
  • ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது.
  • சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கோவை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி கோவையில் உள்ள ராகவேந்திரா கோவில் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு கிராஸ்கட் ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஏராளமானோர் படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.படம் முடிந்ததும் தியேட்டர் முன்பு கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் 25 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் ராஜேஷ் குமார், பாபு, செந்தில் குமார், பாலாஜி, குபேரன் சுரேஷ், நாகராஜ், செந்தில், ரஜினி குணா, ஸ்ரீனிவாசன் மணிவண்ணன், பட்டணம் ரவி, வெங்கடாசலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News