- போலீசை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது31) இவர் அறந்தாங்கி காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுனர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வேலை நிமித்தமாக சென்றுள்ளார். அப்போது சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்த கான்ஸ்டபிள் சேகர் அவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து வாதம் செய்துள்ளனர். இதில் கான்ஸ்டபிள் சேகருக்கும், கும்பலை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அஜித்குமார், சேகரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து சேகர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவல்த்துறையினர், அஜித்குமாரை விசாரித்ததில் அவர்குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது, அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர். காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.