உள்ளூர் செய்திகள்
வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
- வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மாணவர்கள் தங்களின் கைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:
13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி ஆலங்குடியில் நடைபெற்றது. பேரணியை தாசில்தார் செந்தில்நாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக தாசில்தார் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேரணியானது பள்ளி மாணவர்கள் காமராஜர் சிலை, அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு, முக்கம், சந்தைப்பேட்டை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சென்றது.
மாணவர்கள் தங்களின் கைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தாசில்தார் பழனியப்பன் மற்றும் பாலகோபாலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.