உள்ளூர் செய்திகள்
வெட்டிய மரம் விழுந்து முதியவர் பலி
- வெட்டிய மரம் விழுந்து முதியவர் பலியானார்
- மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 65), இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர், பணியிடத்தில் பலாமரம் ஒன்றை வெட்டியுள்ளார். அப்போது மரம் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை,
அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நடராஜன் உயிரிழந்தார்.இச் சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.