உள்ளூர் செய்திகள்

கோவிலில் தாலிக்கட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-10-12 14:35 IST   |   Update On 2022-10-12 14:35:00 IST
  • கோவிலில் தாலிக்கட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
  • பெற்றோர்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நரைச்சேர்ந்த வர் சொக்கலிங்கம் மகள் பிரியா (வயது 21 )இவர் பிஏ பட்டதாரி ஆவார்.

இதே பகுதி கேவிஸ் தெருவைச்சேர்ந்த சுப்பையா மகன் சிவாஜி (29). இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்த இவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் நெம்மக்கோட்டை சித்திவிநாயகர் கோவிலில் மாலை திருமணம் செய்து கொண்டனர்.

தங்கள் திருமணத்தால் உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்ற அச்சதுடன் பாதுகாப்பு கருதி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

மேலும் பிரியா கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர்சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து இரு பெற்றோர்களையும் வரவழைத்து பேசினார். ஆனால் இவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால்,

வயதை காரணம் காட்டி போலீசார் இருவரையும் சமதானப்படுத்தி காதல் ஜோடிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News