உள்ளூர் செய்திகள்

வெறிநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-10 06:18 GMT   |   Update On 2022-08-10 06:18 GMT
  • வெறிநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கால்நடைகளை கடித்து குதறுகின்றன

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் பகுதியி ல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக, வெறி நாய்கள் கடித்து 3 பேர் ஆ லங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

அதற்கு மறுநாளே வடகாடு வடக்குப்பட்டியில் அண்ணாதுரை என்ப வரது 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது. இதனை தொடர்ந்து வடகாடு பாப் பாமனையை சேர்ந்த லட்சுமணன் என்பவரது 3 ஆடுகளையும் வெறி நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. இதே போல் ஆலங்குடி முழுவதும் வெறி நாய்களின் தொல்லை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இறைச்சி கழிவு களை அருகேயுள்ள அம்மன்குளம் பகுதிகளில் கொண்டு சென்று ஒ ரு சிலர் கொட்டி வருகின்றனர். அதனை சாப்பிட்டு ருசி கண்ட நாய்கள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வந்து ஆடு. மாடுகள் மற் றும் சில நேரங்களில் மனிதர்களையும் கடித்து குதறுகிறது.

மேலும் இறைச்சி கழிவுகள் மற்றும் மொய் விருந்து முடிந்தவுடன் சாப்பிட்ட இலைகள் ஆகியவற்றை குழிதோண்டி மூடாமல் அப்படியே வீசி வருவதும் ஒரு காரணமாக உள்ளது. மேலும் வெறி நாய்கள் கடி த்து பலியான ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனி மேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News