உள்ளூர் செய்திகள்

அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்களை அனுமதிக்க கோரிக்கை

Published On 2022-08-13 08:37 GMT   |   Update On 2022-08-13 08:37 GMT
  • அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்களை அனுமதிக்க கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது
  • உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றுவிடும் முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் ஆண்டிற்கு ஒரு முறை மட்மே விவசாயம் செய்யப்படுகிறது. அதிலும் பறவையினங்கள், எலி போன்றவற்றால் போதிய மகசூல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே உரிய காலத்தில் அதிக மகசூல் பெறவும், 10 சதவீதத்திற்கும் குறைவாக உரம் பயன்படுத்தப்படும் சிஆர் 1009, ஆடுதுறை 37 போன்ற நெல் ரகங்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதித்திட வேண்டும் என்று கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் கொக்குமடை ரமேஷ், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது, மற்ற நெல் ரகங்களுக்கு 90 சதவீதம் வரை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்த வேண்டும், ஆனால் சிஆர் 1009, ஆடுதுறை 37 போன்ற ரக நெல்களுக்கு 10 சதவீதம் உரம் பயன்படுத்தினால் போதும், எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி சிஆர் 1009, ஆடுதுறை 37 நெல் ரகங்களை மாவட்டத்தில் அனுமதித்திட வேண்டும். மேலும் உரிய காலத்தில் யூரியா, டிஎபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ்போன்ற உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News