உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்-நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை

Published On 2023-01-26 12:52 IST   |   Update On 2023-01-26 12:52:00 IST
  • புதுக்சிகோட்டையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்
  • தெருவிளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைப்பெற்றது. துணைத்தலைவர் லியாகத் அலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், மற்றும் அதிகாரிகள், திமுக, அதிமுக, காங்கிரஸ், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில்தலைவர் திலகவதி செந்தில் பேசும் போது, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. தெருவிளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளைஉடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் நகராட்சி கடந்த 1988 முதல் தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. அதனால் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அதற்கு கட்டமைப்புகள் உள்ள காரணத்தினால் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக அரசிற்கு தீர்மானம் இயற்றி அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். அதன் பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கான தேவைகள் குறித்து பேசினர்.


Tags:    

Similar News