உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-09-14 14:04 IST   |   Update On 2022-09-14 14:04:00 IST
  • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • நூறு நாள் பணி வழங்காததை கண்டித்து

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு பணி வழங்காததை கணடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலியமங்கலம் ஊராட்சியில் பணிபுரியும் மகாத்மாகாந்தி நூறுநாள் திட்டப் பணியாளர்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் நூறுநாள் திட்டப் பணியாளர்கள் ஒலியமங்கலம் - புதுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சென்ற அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பணி வழங்கப்படும் என்று கூறி பேச்சு வார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News