பள்ளியின் மேற்கூறை இடிந்துவிழுந்து காயம் அடைந்த மாணவனுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
- பள்ளியின் மேற்கூறை இடிந்துவிழுந்து காயம் அடைந்த மாணவனுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார்.
- கலெக்டரும் ஆறுதல் கூறினார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே உள்ள எஸ்.களபம் ஊராட் சிக்குட்பட்ட களபம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளாக பாழடைந்த நிலையிலேயே உள்ளது. 40 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வகுப்புகள் தொடங்கி நடை–பெற்று வந்த நிலை–யில் காலை 11.30 மணிய–ளவில் பள்ளியின் மேற் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வகுப்பறையில் இருந்த 4-ம் வகுப்பு மாணவர் பரத் (வயது 9) காயம் அடைந்தார். தலையில் ரத்த காயத் துடன் உடனடியாக அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முத–லுதவி சிகிச்சைக்கு பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டார்.
தகவலின் பேரில் உடன–டியாக அங்கு சென்ற அமைச்சர் சிவ.வீ.மெய்ய–நாதன் மாணவருக்கு ஆறு–தல் கூறியதோடு, உயர் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதற்கி–டையே கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி–யின் தலைமை ஆசிரியை மகாலட்சுமியை சஸ்பெண்டு செய்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மஞ்சுளா உத்தர–விட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளியின் சுற்று சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் கடந்த 40 ஆண்டுடுகளுக்கு மேலாக பாழடைந்த நிலையில் இருந்து வருவதாகவும், தாங்கள் பலமுறை பள்ளிக்குரிய அலுவலர்களிடம் மற்றும் ஒன்றிய ஆணையரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஏற்பட்ட விபத்தில் மாணவர் உயிர் தப்பியுள்ளார். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர், மேற்கூரைகள் இடிந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறினார்.
இத்தகவல் அறிந்த கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் நளினி மற்றும் கிராம வட்டார வளர்ச்சி தமிழ்செல்வன், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.