உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு குப்பை கொட்டும் போராட்டம்

Published On 2023-05-17 12:29 IST   |   Update On 2023-05-17 12:29:00 IST
  • ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு குப்பை கொட்டும் போராட்டம் நடந்தது
  • கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலபட்டிணம் அவுலியா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் முறையான சாலை வசதிகள் இல்லாததாலும், கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுநீரை அலுவலக வளாகத்திற்குள் கொட்டி விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News