உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் சாராயம் விற்றவர் கைது
- ஆலங்குடியில் சாராயம் விற்றவர் கைது செய்யபட்டார்
- அழகன்விடுதி பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
ஆலங்குடி:
புதுக்கோட்டைமேட்டுப் பட்டி ஓடியனேரி காலனி ராஜ்குமார் மகன் சிவகுமார் (வயது 23). இவர் கறம்பக்குடி அருகே உள்ள அழகன்விடுதி பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று நடத்திய சோதனையில், அவரிடமிருந்து 10 லிட்டர் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.