உள்ளூர் செய்திகள்

பேரிடர் குறித்து விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-23 12:04 IST   |   Update On 2022-09-23 12:04:00 IST
  • பேரிடர் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது
  • மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் பேரிடர் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டு, தாலுக்காக்கள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏம்பலில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு பேரணியில், துணை வட்டாட்சியர் பாலமுருகன், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தனர்.

பேரணியானது முக்கிய கடைவீதி வழியாக பேருந்து நிலையம் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர். முன்னதாக பேரிடர் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியன நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் துரையரசன், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News