உள்ளூர் செய்திகள்
மணமேல்குடி அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பரிசு
- மணமேல்குடி அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.
- ஆசிரியர்கள் பாராட்டினர்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 13 ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவற்றில் மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சீனி ராஜஸ்ரீ உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கி கௌரவித்தார். மேலும் சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை கங்கா கௌரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.