உள்ளூர் செய்திகள்

2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி

Published On 2022-09-26 11:50 IST   |   Update On 2022-09-26 11:50:00 IST
  • 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
  • நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் சாகுபடி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீரை கொண்டு 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். அதே போன்று சுமார் 1.75 லட்சம் ஏக்கரில் மழை நீரையும், நிலத்தடி நீரையும் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும்.

இதில் அறந்தாங்கி ஆவுடையார் கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 75 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் சாகுபடி செய்யப்படும்.

அண்மையில் பெய்த மழைநீரைப் பயன்படுத்தி நிலத்தை உழுது நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் விதைக்கப்பட்டு வருகிறது. கண்மாய் மற்றும் ஆழ்துளைக் கிணறு தண்ணீர் வசதி உள்ளோர் நெல் நாற்றங்கால் தயாரிப்பிலும் நடவு பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறன்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழையால் கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ள நிலையில் கடந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழை பெய்ததைப் போன்று நிகழாண்டும் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கூறியதாவது :

நேரடி நெல் விதைப்பு முறை அதற்குரிய நெல் விதைகளுடன் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியத்தில் 250 ஏக்கருக்கு நேரடி நெல் விதைப்பு தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போன்று தேவைக்கு ஏற்ப விதை, இடுபொருட்கள் இருப்பில்ள்ளன என்றார். 

Tags:    

Similar News