உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அரசு பள்ளியில் போதையின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- ஆலங்குடி அரசு பள்ளியில் போதையின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது, போதைப்பொருட்கள் தீமை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மணமல்லி, மது, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மற் றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (10581) குறித்தும் துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை வகித்தார். எஸ்.ஐ. புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.