உள்ளூர் செய்திகள்

பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

Published On 2022-10-25 11:36 IST   |   Update On 2022-10-25 11:36:00 IST
  • பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  • அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பேரையூர் விளக்கு சாலையில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலை செல்கிறது.

இந்த சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இதனால் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடந்து கோவில் செல்லவும், ஊருக்கு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பேரையூர் விளக்கு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், சிலர் இறந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News