புதுக்கோட்டை அருகே ெபாதுபாதை பிரச்சனையில் சுமூக தீர்வு-தாசில்தார் முன்னிலையில் உடன்பாடு
- புதுக்கோட்டை அருகே ெபாதுபாதை பிரச்சனையில் சுமூக தீர்வு காணபட்டது
- கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்களுர், முல்லைநகர் அருகே உள்ள இடத்தை முஸ்லீம் சமூகத்தினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அந்த இடத்தை முல்லை நகர் மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பொதுபாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே பாதை பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி தலைமையில் சமாதான கூட்டம் நடைப்பெற்றது. அதில் இருதரப்பினரும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஏற்கனவே இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும், முஸ்லீம் தரப்பில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தடை செய்ய கூடாது, குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும் பொதுபாதையை பயன்படுத்துவதை யாரும் தடை செய்ய கூடாது, கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்திற்கு பெருங்களுர்ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், செந்தில், ஜெயராமன், சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாத்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.