லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது
- ரூ.4.5 லட்சம் பறிமுதல்
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் தனிப்படை போலீசர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியில் உளள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது29), ராமு (23), கார்த்திக் (24), விக்னேஷ் (28), சரவணக்குமார்(26), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 8 லேப்டாப், 13 ஆண்ட்ராய்டு கைபேசிகள், 1 கார், 6 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து நாகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 6 பேர் மீது வழக்குப்பதிந்த காவல்த்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர். ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கரை லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.