மின்வயர்களை திருடிய 3 பேர் கைது
- மின்வயர்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- ஆழ்குழாய் கிணற்றில் இருந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பகுதியில் உள்ள பல்வேறு ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்வயர்களை சில மர்மநபர்கள் திருடிச்செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், வேம்பங்குடி பகுதியில் சிங்காரம் என்பவரது தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சிலர் மின்வயர்களை திருடியது தெரியவந்தது.
அவர்களை அப்பகுதியினர் விரட்டிச்சென்று , ஒருவரை பிடித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேந்தன்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பதும், பல இடங்களில் மின்வயர்களை சிலரோடு சேர்ந்து திருடி விற்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலைத்தொடர்ந்து, அதே ஊரரைச் சேர்ந்த ஆர்.மனோஜ் , தமிழ்குமார்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கீரமங்கலத்தில் உள்ள பழைய இரும்புக்கடை வியாபாரியிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.