உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆகாஷ்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - தென்காசி கலெக்டர் தகவல்

Published On 2022-09-03 08:41 GMT   |   Update On 2022-09-03 08:41 GMT
  • வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு பகுதிகளில் இடம்பெறுவதையும் தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது
  • ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது.

தென்காசி:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையிலும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு பகுதிகளில் இடம்பெறுவதையும் தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் VHA(voter Help line Mobile App) என்ற செயலியின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் https://tenkasi.nic.in/ இணையதளத்தின் மூலம் படிவம் 6பி- ஐ பதிவிறக்கம் செய்தும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

அனைத்து வாக்காளர் களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News