உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற முதியோர்களுக்கு போர்வைகள் உதவி கரங்கள் சார்பில் ஆண்டனி ஜெயராஜ் வழங்கினார்.

ஆதரவற்ற முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

Published On 2022-11-22 08:17 GMT   |   Update On 2022-11-22 08:17 GMT
  • ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
  • 100 பேருக்கு போர்வைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.

நாகப்பட்டினம்:

உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி ஆலய வாசல், பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதித்த பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தற்பொழுது நிலவும் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனை போக்கு வகையில் வேளாங்கண்ணி உதவி கரங்கள் சேவை நிறுவனம் சார்பில் 100 பேருக்கு போர்வைகளை இரவு நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.

இந்நிகழ்வில் உதவிக்–கரங்கள் நிறுவனர் ஆண்டனி ஜெயராஜ் தலைமையேற்று ஏழைகளுக்கு போர்வை அணிவித்து துவங்கி வைத்தார்.

நிர்வாகிகள் பீட்டர், ஜெயசீலன் ஆசிரியர், துரைராஜ், அந்தோணிராஜ், கருணானந்தம், விஜய் மற்றும் உதவிக்கரங்கள் சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News