உள்ளூர் செய்திகள்

சேலம் நெத்திமேட்டில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்

Published On 2023-05-03 15:09 IST   |   Update On 2023-05-03 15:09:00 IST
  • நெத்திமேடு ஜெ.ஜெ.நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் நெத்திமேடு ஜெ.ஜெ.நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிலர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஷாலினி (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 24 வயது இளம்பெண்ணை மீட்டனர்.

Tags:    

Similar News