உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு போலீசார் உணவு பரிமாறி கவுரவித்தனர்.

தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-10-27 09:50 GMT   |   Update On 2022-10-27 09:50 GMT
  • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
  • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News